Pages

Tuesday 2 August 2016

வீரமங்கை வேலு நாச்சியார் வரலாறு

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு  அருகிலுள்ள  ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார்  என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை  பிறந்தது.  அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.  செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி -  கேள்விகளில்  சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார்  போர்க்களம் சென்றுவாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார்.  அவர் ஒரு சிறந்த  வீராங்கணையாக உருவாக்கப்பட்டார்.

 சிவகங்கைச் சீமையின்  இரண்டாவது மன்னர்  முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்குவேலுநாச்சியார் திருமணம் செய்து  வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.
முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது   நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது   சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு  குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு   பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச்  சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.

இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட   மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில்  தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல்  நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப்  படையின் பீரங்கிக்  குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி  கௌரி நாச்சியாரும்அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர்.

முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.
பிரதானி தாண்டவராய பிள்ளை,மருது சகோதரர் கள் வேலு நாச்சியாரைச் சமாதானம்  செய்து, இழந்த சீமையை அவர்கள் எவ்வகையிலும்  மீட்டுத் தருவதாக ராணிக்கு  வாக்குறுதி வழங்கினர். கொல்லங்குடியில்  தங்கியிருந்த வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி  தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள்  துணையுடன் மேலூர் வழியாக  திண்டுக்கல்லுக்கருகிலுள்ள  விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தப்பிச்  சென்றார். விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், விருப்பாட்சியில் அவர்கள்   மிகப் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தகுந்த வசதிகளைச் செய்து கொடுத்தார்.   ஆற்காடு நவாபின் பிடியிலிருந்து இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மறவர் சீமைகளை  விடுவித்து நவாபை விரட்டி அடிப்பதற்கு ராணி வேலுநாச்சியார்   திண்டுக்கல்லில் தங்கியிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி   கேட்டார்.
பிரதானி தாண்டவராயபிள்ளை 8-12-1772 வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு   ஒரு கடிதமெழுதி ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும்  அனுப்பி வைத்தால், அவர்களுடன் இணைந்து போரிட்டு, இரு சமஸ்தானங்களையும்   நவாபிடமிருந்து கைப்பற்ற இயலுமென்று, அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.பிள்ளையவர்கள் உடல் நலிவுற்று முதுமையின் காரணமாக படை உதவி கேட்ட ஆறு   மாதங்களுக்குள் 1773ம் ஆண்டு இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.

பின்னர் வேலு நாச்சியார் தனது படைகளை ‘சிவகங்கை பிரிவு”, ‘திருப்புத்தூர்   பிரிவு”, ‘காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்.   சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்புத்தூர் பிரிவிற்கு   நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது   சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து வேலு நாச்சியார் அனுப்பி   வைத்தார். வேலுநாச்சியார் அம்முப்படைப் பிரிவை அனுப்பி மும்முனைத்   தாக்குதல் நடத்தி நவாபின் படைகளை எளிதில் வெற்றி கண்டார ராணி வேலுநாச்சியார் ஹைதர் அலியின் படை உதவியை எதிர்பார்த்து, எட்டு   ஆண்டுகள் விருப்பாட்சிப்பாளையத்தில் தங்கியிருந்தார். அவருக்குப்   பக்கபலமாகப் பெரியமருதுவும், சின்னமருதுவும் துணையாக உடனிருந்தனர்.

ஒரு சமயம் வேலு நாச்சியார், அவரது மகள்வெள்ளச்சி நாச்சியார் மருது  சகோதரர்கள் முதலியோர் திண்டுக்கல் கோட்டையிலிருந்த மைசூர் மன்னர்  ஹைதர்  அலியைச் சந்தித்தனர். அவர், அவர்களை வரவேற்று உபசரித்தார்.  ராணியுடனிருந்த  சின்னஞ்சிறு சிறுமி வெள்ளச்சி நாச்சியாரைக் கண்டு  மனமிரங்கி அனுதாபம்  கொண்டார். அச்சிறுமி மேல் பரிவும், பாசமும், கருணையும் கொண்டார். அவர்களது  தாய் நாட்டுப் பற்றையும், வீரத்தையும் கண்டு வியந்து  அவர் மகிழ்ச்சியுற்று  அவர்களுக்கு உதவி செய்வதாக ஆறுதல் கூறினார்.
பிரதானியின் மறைவிற்குப் பின்னர், வேலுநாச்சியார் தான் நேரடியாக அரசியல்   விவகாரங்களில் ஈடுபடத் தீர்மானித்தார். பிரதானி விட்டுச் சென்ற பணிகளை   குறிப்பாக, சிவகங்கைச் சீமையின் நாட்டார்களுடன் கொண்ட ஓலைத் தொடர்புகளை,   தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தமது கணவரிடம் மிகுந்த விசுவாசத்துடன்   பணியாற்றிய மருது சகோதரர்களையும் இந்த அரசியல் பணியில் வேலுநாச்சியார்   ஈடுபடுத்தினார்.

விருப்பாட்சியிலிருந்து சிவகங்கைச் சீமைத் தலைவர்களுக்கு அனுப்பிய   ஓலைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. சிவகங்கைச் சீமை மக்கள் பலர், சிறுசிறு   குழுக்களாக ஆயுதங்களுடன் விருப்பாட்சி போய்ச் சேர்ந்தனர். அவர்கள் ராணி   வேலுநாச்சியாரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சிலர் அங்கேயே   ராணிக்குப் பாதுகாப்பாகத் தங்கவும் செய்தனர். எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
ராணி வேலு நாச்சியாரது முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நெருங்கி   வந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும்,   அழித்தொழிக்கும் அற்புதத் திட்டமொன்றினை உருவாக்கி அதைச்   செயல்படுத்துவதற்கு ஹைதர் அலி ஆயத்தமானார். சிவகங்கைச் சீமையை ஆற்காடு நவாபின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு உதவும்  படைகளைத் திண்டுக்கல் கோட்டை வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஹைதர் அலி, ராணி  வேலுநாச்சியாருக்கு செய்தி அனுப்பினார்.
விருப்பாட்சியிலிருந்து   சிவகங்கைபுறப்படுவதைத்திண்டுக்கல் கோட்டை கிலேதார் சையது காகிற்கு உடனே   ராணி தகவல் கொடுத்தார். குறிப்பிட்ட நாளன்று, ராணி வேலு நாச்சியார், மருது  சகோதரர்கள் வழிகாட்டுதலில் ஹைதர் அலி வழங்கிய குதிரைப் படைகள், சின்ன  மறவர்  சீமை சிவகங்கை நோக்கிச் சீறிப் பாய்ந்தன.
ஆற்காடு நவாபின் படைகள் வழியில் பல்வேறு தடைகளை அமைத்தன. வேலு நாச்சியாரது  குதிரைப் படைகள், அத்தடைகளைத் தகர்த்தெறிந்து, பெரும் தாக்குதலில்   ஈடுபட்டன. மதுரைக்கருகில் ‘கோச்சடை” என்னுமிடத்தில் கம்பெனிப் படைகளும்,   நவாபின் படைகளும் தடைகள் ஏற்படுத்தித் தாக்கின. வேலு நாச்சியாரது படைகள்,   நவாபின் படைகளைப் பாய்ந்து தாக்கித் தவிடுபொடியாக்கின.

மானாமதுரை   வைகையாற்றுப் பகுதியில், வேலு நாச்சியாரது படைகள், கம்பெனி படைகளைத் தாக்கி  அவை ஓடி ஒளியுமளவிற்குச் சண்டையிட்டு வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற வேலு நாச்சியார், இளவரசி வெள்ளச்சி நாச்சியாரும் மருது   சகோதரர்களும் சிவகங்கைக் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர். மக்கள் கூட்டம்   அவர்களை மகிழ்வுடன் வரவேற்று வாழ்த்தி வணங்கியது. 1780ம் ஆண்டு   வேலுநாச்சியார், தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை சிவகங்கைச் சீமையின்   அரசியாக மகிவும் எளிமையான ஒரு விழாவில் முடிசூட்டி, அரியணையில் அமரச்செய்தார்.
பெரிய மருதுவைத்தளபதியாகவும் (தளவாய்) சின்ன மருதுவை   முதலமைச்சராகவும் (பிரதானி) நியமனம் செய்து வேலுநாச்சியார் ஆணைகள்   பிறப்பித்தார். இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் பிரதிநிதியாக ராணி   வேலுநாச்சியார் சிவகங்கைச் சிமையை 1780ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து   வந்தார். சீமையின் நிர்வாக இயக்கத்திற்கு பிரதானிகள் (மருது சகோதரர்கள்)   உதவி வந்தனர்.
இளவரசி வெள்ளச்சி திருமணம் ஆகாத கன்னிகையாகவும், ராணி வேலுநாச்சியார்   கணவரை இழந்த கைம்பெண்ணாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் இருவரும் அரசயில்  நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து பணிகளிலும் நேரடியாக ஈடுபட இயலாத நிலை,   அத்துடன் அன்றைய சமுதாய அமைப்பில், இத்தகைய உயர்குலப் பெண்கள், தங்கள்   தனிமை நிலையைத் தவிர்த்து பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவது விரும்பத்  தகாததாகவும் இருந்தது. ‘பெண் உரிமை” என்ற விழிப்புணர்வுடன் பாரம்பரியமாக  வந்த மரபுகள் மீறுவதையும் ஏற்று சகித்துக் கொள்ளாத சமூகநிலை இத்தகைய   இறுக்கமான அகச்சூழலில் அரசியலை பிரதானிகள் மூலமாக அரசியார் சிறப்பாக நடத்தி  வந்திருப்பது அருமையிலும் அருமை.” எனவே சிவகங்கைச்சீமை நிர்வாகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வந்தனர்.
வேலுநாச்சியார் நாலுகோட்டை சசிவர்ணப் பெரிய உடையத்தேவர் குடும்ப வழியில்   வந்த உறவினரான படமாத்தூர் கௌரி வல்லபத் தேவர் என்ற புத்திசாலி இளைஞனைத்   தமது பாதுகாப்பில் வைததிருந்தார்.

 படமாத்தூர் கௌரி வல்லபத் தேவரை சுவீகாரம்  எடுத்து தனக்குப் பின்னர் தனது வாரிசாக அவருக்குப் பட்டம் சூட்ட   வேலுநாச்சியார் விரும்பினார். அவருக்கு தனது மகள் இளவரசி வெள்ளச்சி   நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்து, அவரை சிவகங்கை மன்னராக ஆக்கவும்   ராணி முடிவு செய்திருந்தார். அதை உணர்த்தும் வகையில் அரசு விழா ஒன்றில் அவரை  அறிமுகப்படுத்தி வைப்பது என்று ராணி முடிவு செய்திருந்தார். அதன்படி   காளையர் கோயில் ஆலயத்தில் படமாத்தூர் கௌரி வல்லபத் தேவருககு இளவரசுப்   பட்டம் சூட்டப்பட்டது.
அவ்விழாவிற்கு நாட்டுத் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். சிறப்பான   வழிபாடுகள் முடிந்த பின்னர் கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த   இருக்கையில் இளவரசர் கௌரி வல்லபத் தேவரை அமரச் செய்து, பிரதானிகளும்   நாட்டுத் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்கினர்.

சில காலம் சென்ற பின்னர் சிவகங்கை பிரதானிகளுக்கு (மருது சகோதரர்களுக்கு)   இளவரசர் கௌரி வல்லபத் தேவரை பிடிக்கவில்லை. வேலுநாச்சியார், தமது மகளை   படமாத்தூர் கௌரி வல்லபத் தேவருக்குத் திருமணம் செய்து கொடுப்பது   சம்பந்தமாய், இரு பிரதானிகளுடன் ஆலோசனை செய்தார். மருது சகோதரர்கள் அந்த   திருமண சம்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தனர். கௌரிவல்லபத் தேவர் சிவகங்கைச்  சீமைக்கு மருமகனாவதற்குத் தகுதி, திறமையில்லாதவரென்றும், முரட்டுத்  தனமும்அரச குடும்பத்திற்குரிய தகுதிகள் இல்லாதவரென்றும், அவர்கள்  மறுப்புத்  தெரிவித்தனர். மிகுந்த வேதனையால் ராணி மிகக் கவலையடைந்தார்.
இதற்கிடையில் ராணி கௌரி வல்லபத் தேவரை தனது வாரிசாகத் தத்தெடுப்பதையும்   திருமண உறவின் மூலம் அதிகாரம் பெறுவதையும் மருது சகோதரர்கள் விரும்பவில்லை.  எனவே, அவர்கள் கௌரி வல்லபத் தேவரை காளையார் கோயில் ஆலயத்தில், தக்க   பாதுகாப்பில் சிறைவைத்து அவரைக் கொலை செய்ய முயன்றனர். இந்தச் செய்தி   ராணியாருக்குக் கிடைத்ததும், மருது சகோதரர்களிடம் இதுபற்றிக் கேட்டார்.

கௌரி வல்லபத் தேவர் சிறையில் வைக்கப்படவில்லையென்றும், அவர் சிவகங்கைச்   சீமையைக் கைப்பற்றி இராமநாதபுரம – சிவகங்கைகொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட   ‘சேது நாடு” ஒன்றை உருவாக்க இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னருடன்  ஓலைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அது தொடர்பான விசாரணைக்காக   அவரைக்காளையார் கோயில் ஆலயத்தில் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறி   ராணியைச் சமாதானப்படுத்தினர்.
பின்னர் கௌரி வல்லபத் தேவர் காளையர்கோயில் ஆலயத்தில் பணியாற்றும் கருப்பாயி  என்ற நடப் பெண் உதவி செய்து தப்பிக்க வைத்ததின் மூலம் காளையார்   கோயிலிருந்து தப்பிச் சென்ற அவர்  புதுக்கோட்டை மன்னரிடம் தஞ்சமடைந்த கௌரி வல்லபத்தேவரை மன்னர் அறந்தாங்கியில் மிகப் பாதுகாப்பாகத் தங்க வைத்திருந்தார்.
இளவரசி வெள்ளச்சி நாச்சியார் திருமணம் பற்றி மீண்டும் ராணி மருது   சகோதரர்களிடம் ஆலோசனை செய்த போது தக்க மணமகன் ஒருவரை அவர்கள் தேடி   வருவதாகவும், விரைவில் ராணிக்கு முடிவான தகவல் தருவதாகவும் அவர்கள்   தெரிவித்தனர். சில மாதங்களுக்குப் பிறகு மருது சகோதரர்கள், இளவரசி வெள்ளச்சி நாச்சியாருக்கு சக்கந்தி வேங்கை பெரிய உடையணத் தேவர் என்பவரை திருமணம்செய்து வைக்கலாம் என்று கூறினர்.

சக்கந்தி வேங்கை பெரிய உடையணத்   தேவர் சிவகங்கைக்கருகிலுள்ள சக்கந்தி நிலக்கிழாரில் ஒருவரான சக்கந்தித்   தேவரின் மகனென்றும் செம்பிய நாட்டு கிளையைச் சேர்ந்த மறவர் என்பதால்,   திருமணம் செய்யலாம் என்றும் மருது சகோதரர்கள் ஆலோசனை கூறினர். ராணி வேங்கை  பெரிய உடையணத் தேவருக்கு தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்தார்.
இந்தத் திருமணத்திற்குப் பின்னர் ராணிக்குப் படமாத்தூர் கௌரி வல்லபத்   தேவருடன் திருமண உறவு ஏற்படவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. இந்நிலையில் ராணி வேலுநாச்சியாருக்கும் மருது சகோதரர்களுக்குமிடையே பெருத்த கருத்து   வேறுபாடொன்று உருவாகியது. ஒரு சமயம் சிவகங்கைச் சீமைக்கும், புதுக்கோட்டைத் தொண்டைமான்   நாட்டிற்குமிடையே ஒரு சிறு எல்லைப் பிரச்சனை தோன்றியது. சிவகங்கைப் பிரதானி  சின்னமருது, அந்த எல்லைப் பிரச்சினையில் ராணி வேலுநாச்சியாரைக் கலந்து   ஆலோசனை செய்யாமல், அவரது முன் அனுமதியைப் பெறாமல்தொண்டமான்நாட்டின் மீது   படையெடுத்தார்.

தொண்டமான் நாட்டில் வாழ்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் கள்ளர் வகுப்பைச்  சார்ந்தவர்கள்.  அவர்களோடு சிவகங்கைச் சீமை மக்கள் திருமண உறவும், பல்வேறு  தொடர்புகளும்  கொண்டுள்ளதால் சிவகங்கைப் படையெடுப்பு கள்ளர் இன மக்களது  விரோதத்தை  வளர்க்கும் என்று ராணி கருதினார்.
1788ம் ஆண்டு ராணி வேலுநாச்சியாருக்கும், பிரதானி சின்ன   மருதுவிற்குமிடையேஇருந்த கருத்துவேறுபாடு உச்ச நிலையை அடைந்தது. சிவகங்கைச்  சீமையில் ராணி வேலுநாச்சியார் ஆதரவாளர்களென்றும் பிரதானி சின்னமருது   ஆதரவாளர்களென்றும் இருபிரிவுகள் தோன்றின. சிவகங்கைக் குடிமக்கள் இரு   பிரிவுகளாகப் பிரிந்து அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்.
இறுதியில் வேலுநாச்சியார் வெற்றிபெற்று பணியவைக்க மருதுசகோதர்கள் தன்தவறை உணர்ந்து இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று மன்னிப்பு கூறியதும் வேலுநாச்சியார் மருதுசகோதர்கள் செய்த உதவிகளை நினைத்து மன்னிப்பு வழங்கி திரும்ப ஏற்றுகொண்டார்

கயவர்களின் சூழ்ச்சியின் காரணமாக சக்கந்தி வேங்கை பெரிய உடையத் தேவரின் மனைவி வெள்ளச்சி நாச்சியார்,   துரதிஷ்டவசமாக வேலுநாச்சியாருக்கு முன்னரே மரணமடைந்துவிட்டார். எனவே,   சிவகங்கைச் சீமையில் சுமுகமான ஆட்சி மாற்றமும், நிர்வாகமும் ஏற்படும் வகையில் சில ஆலோசனைகளை ராணிக்கு வழங்கினார்கள்.
ராணி வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமையின் அரச பதவியிலிருந்து   விலகுவதென்றும், அவருக்குப் பதிலாக சிவகங்கை மன்னராக வேங்கை பெரிய உடையணத்  தேவர் பதவி ஏற்பதென்றும், மருது சகோதரர்கள் பிரதானியாகவும், தளபதியாகவும்  பதவியேற்பதெனவும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. ராணி வேலுநாச்சியார் இந்த சமரசத் திட்டத்தை தனது அரச பதவியைப் பறிப்பதற்கான  சதித் திட்டமெனக் கருதினார். எனினும், தனது மருமகன் வேங்கை பெரிய உடையணத்  தேவர், தனக்குப் பதிலாகச் சிவகங்கைச் சீமையின் மன்னராகப்   பதவியேற்கவிருப்பதால், வேலுநாச்சியார் இந்த சமரச உடன்பாட்டை வேலுநாச்சியார்  இந்த சமரச உடன்பாட்டை ஏற்றுக்கொண்டார். மருது சகோதரர்களும் இந்த   உடன்பாட்டை வரவேற்றனர். ராணி வேலு நாச்சியாரின் பத்தாண்டு கால ஆட்சி 1789ம்  ஆண்டு டிசம்பரில் முடிவுற்றது. 1800ம் ஆண்டு வேலுநாச்சியார்   இம்மண்ணுலகைவிட்டுமறைந்தார்.

வீரநங்கை வேலுநாச்சியாரை  ’இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்” என அழைக்கலாம். ‘வெள்ளையருக்கு எதிராக வாளெடுத்து வீரப்போர் புரிந்த ‘முத்து வடுகநாதரின்  மனைவி – வீரமங்கை வேலுநாச்சி – அன்று நடத்திய சிறப்பு வாய்ந்த வீரப்போர்   வாயிலாக ‘வேங்கடத்திற்கு வடக்கே ஒரு ஜான்சி ராணி தோன்றுவதற்கு இரு   நூற்றாண்டுகட்கு முன்பே தமிழகம் தன் ஜான்சி ராணியைக் கண்டுவிட்டது” என்று   வரலாற்று ஆசிரியர்கள் போற்றும்படி செய்துவிட்டாள் என்று வரலாற்றுப்   பேராசிரியர் திரு. ந. சஞ்சீவி அவர்கள் ‘மருதிருவர்” என்ற தனது நூலில்   குறிப்பிடுகின்றார்.

மேலும் அதே ஆசிரியர் வீரமங்கை வேலுநாச்சியை ‘தமிழகத்தின் ஜான்சி ராணி”   என்று போற்றுவதைவிட ஜான்சி ராணியை ‘வடநாட்டு வேலுநாச்சி” என்று புகழ்வதே   சாலப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது” என்று வேலு நாச்சியாரைப் பற்றி   சிறப்பாகப் புகழ்ந்து கூறியுள்ளார்.

Thursday 28 July 2016

மருதுசகோதர்கள் மட்டும் தூக்கில் போடவில்லை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்

மருதுசகோதர்கள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது
1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது . இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
மருதுசகோதர்கள் மட்டும் தூக்கில் போடவில்லை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மறவர் மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
என்பது குறிப்படத்தக்கது.



Wednesday 27 July 2016

மருதுசகோதர்கள் மாமன்னர் இல்லை என்பதிற்கான ஆதாரம்

கோர்ட் டின் தீர்ப்பு

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது.
அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
சிவகங்கை ஜமீன்தார் நகை சார்ந்த இரண்டு பெண்மணிகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை.
யார் அந்த பெண்மணிகள் ?
முதல் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி
மருது சேர்வைக்காரரின் மருமகள்.
இரண்டாம் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி.
இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் மீட்டுக்கொண்டார்
வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார்.
நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள்
- இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தீர்ப்புகளின் சுருக்கம் இது
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.என்று தீர்ப்பு ஆகியது

குறிப்பு
1, வீராய் ஆத்தாள் என் கணவன் மருது மன்னர் என்று கூறி மேல்முறையீடு செய்யவில்லை
அதற்கான ஆதாரத்தையும் கோர்டில் காண்பிக்கபடவில்லை
மருதுசகோதர்கள் ஜமீன்தாரின் அடிமைகள் அவர்களுக்கு நகைகள் மீது உரிமை கிடையாது என்று கூறிதான் நகைகள் பறிமுதல்செய்யபடுகிறது
இதில் இருந்து தெளிவாக தெரிகிறது மருதுசகோதர்கள் மன்னர் இல்லை
மன்னராக இருந்திருந்தால் நகையை அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டு
சிவகங்கை மன்னரிடம் நகையை வாங்கியிருந்திருக்கலாம்

ஏன் மன்னருக்கான ஆதாரத்தை காண்பிக்க வில்லை? இதில்யிருந்தே தெரிகிறது மருதுசகோதர்கள் மன்னர் இல்லை என்று

இரண்டாவது ஆதாரம்

சிவகங்கை சீமையில் மருதுசகோதர்கள் ஆட்சி செய்ததாக கூறப்படும் சிவகங்கை அரண்மனையில் உள்ள மன்னர்கள்கான கல்வெட்டில் மருதுசகோதர்கள் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அரசு பதிவேட்டிலும் சிவகங்கை சீமை மன்னர்கள் பட்டியலில் மருதுசகோதர்கள் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Monday 25 July 2016

மறவர் இனம்


"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி"
-விறற்படை மறவர் வெஞ்சமர் காணின் மறப்போர்ச் செம்பியன்."திருவீழ் மார்பின் தென்னவன்மறவன்"(அகம்:13:5)


உறின் உயிர் அஞ்சா மறவர்

இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் ( திருக்குறள் 776)


சிவகங்கை உருவான வரலாறு

.



சசிவர்ணபெரிய உடையணத்தேவர் தனது குரு சாத்தைப்பையா தவமிருந்த இடத்திற்கு அருகிருந்த நீர் ஊற்றை விரிவு படுத்தி அதை ஒரு தெப்பக்குளமாக உருவாக்கினார் சிவனது கங்கை நீர் ஊற்று இருந்த இடம் சிவகங்கை ஆயிற்று 


அவர் தெப்பக்குளம் தோண்டிய மண்ணிலிருந்து அருகே ஓர் அரண்மனையை அமைத்து அதைச்சுற்றி ஒரு நகரத்தை உருவாக்கி 
சிவகங்கை எனப் பெயரிட்டார் ..
இவ்வாறு


சிவகங்கை
சௌமிய ஆண்டு தைமாதம் 13ம்தேதி
22.1.1730ல் உதயமாயிற்று

Sunday 24 July 2016

சிவகங்கைச் சீமை வரலாற்று சுருக்கம்

17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய ராமநாதபுர சமஸ்தனமாகும்.

 1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தின் 7 வது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8வது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரியஉடையார்தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 2000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற பகுதிகளை சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார்.

 விஜய ரகுநாத சேதுபதிக்குப் பின் சுந்தரேசுவர சேதுபதி 9வது மன்னரானார். அவரை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் சிறைபடுத்தி 10வது மன்னராக தனக்குத் தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ண தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார். ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியை கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டி கட்டயத்தேவர் மன்னரானார்.

உறையூர் போரில் வென்றபின் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாய் பிரித்து அதில் இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவருக்கு அளித்து ராஜா முத்துவிஜயரகுநாத பெரியஉடையத்தேவர் என்று பெயர் சூட்டி சிவகங்கைச்சீமையின் மன்னராக்கினர்.

Friday 1 July 2016

வேலுநாச்சியாரை ஆங்கிலேயரிடம் காத்த கொல்லங்குடி வெட்டுடைய காளி





காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் கொல்லங்குகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.கொல்லங்குடி வெட்டுடைய காளி
அங்கு காளியாக வீற்றிருப்பவர் ராணி வேலு நாச்சியாரை ஆங்கிலப் படையிடமிருந்து காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த உடையாள் என்ற வீரப்பெண்மணிதான் தன்னைக் காக்க தன்னுயிரைக் கொடுத்த உடையாளின் பெயரில் பெண்கள் படையை அமைத்திருந்தார் வேலு நாச்சியார். ராணியைக் காப்பதற்காக இரு துண்டுகளாக வெட்டுப்பட்ட உடையாளை வெட்டு உடைய காளியாக அந்தப் பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தனர்.
கோவில் இருக்கும் கொல்லங்குடி ஆயுதங்கள் செய்யும் இடமாக, கொல்லர்கள் குடியிருந்த இடமாக இருந்ததால் கொல்லர்குடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் கொல்லங்குடி ஆகியிருக்கிறது.
வேலுநாச்சியாரை காப்பாற்றிய மறவர்படை
மறவர்படை தங்க வைக்கப்பட்டிருந்த இடம்தான் காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் மறவர் மங்களம் (இப்போது மறவமங்களம்) என்ற ஊர். வெள்ளையருக்கு எதிரான போரில் இந்த ஊரில் இருந்த வீரர்கள் நிறையப் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் நினைவாக இந்த ஊரில் ஒரு ஊரணி வெட்டப்பட்டிருக்கிறது. அந்த ஊரணிக்குப் பெயர் 'குழு மாண்ட ஊரணி' என்பதாகும். இன்றும் அந்த ஊரணி வரலாற்றின் சாட்சியாக மறவமங்களத்தில் இருக்கிறது.
மருதுசகோதர்கள் தானமாக கொடுத்த கண்மாய்
கொல்லங்குடிக்கு அருகில் இருக்கும் ஊர் குறுக்கத்தி, காளையார் கோவிலுக்கு மருது சகோதரர்கள் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தியபோது தேர் ஓடவில்லையாம். எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை என்றபோது என்ன பிரச்சினை இதை எப்படி சரி செய்வது என்று மருது சகோதரர்கள் ஆலோசனை செய்த நேரத்தில் கொல்லங்குடி காட்டுக்குள்ளே இருக்கும் குறுக்கத்தி கண்மாயில் வீரமுத்து ஆனந்தசாமி என்ற சித்தர் இருக்கிறார் என்றும் அவர் வந்தால் சரி செய்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவரை அழைத்து வந்த மருதுசகோதர்கள்
அந்தச் சித்தரும் தேர்ச் சக்கரத்தில் இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து நீக்கி, அங்கு ஒரு கவியும் பாடியிருக்கிறார். அதன் பின்னரே தேர் ஓடியிருக்கிறது.
ஓடாமல் நின்ற தேர் ஓடிய மகிழ்ச்சியில் பெரியமருது என்ன வேண்டும் கேள் என்று சித்தரிடம் கேட்டதற்கு இப்போது நாங்கள் இருக்கும் குறுக்கத்தி கண்மாய்ப் பகுதியை எனக்கு எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுக்க, குறுக்கத்தி கிராமம் உருவாகியிருக்கிறது. அதன் பின்னர் சில காலம் வாழ்ந்த அந்த சித்தர் தம் மக்களிடம் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதனால் இன்று வரை அந்தக் கிராமத்தில் எந்தக் கோவிலும் இல்லை
அது என்ன குறுக்கத்தி என்றால் குறுக்கத்தி என்பது ஒருவகைப் பூவாம்... சங்க காலத்தில் இருந்திருக்கிறது... இந்தப் பூ குறித்து புறநானூற்றில் பாடல் இருப்பதாகவும் கூறபடுகிறது

முத்துவடுகநாதத் தேவர் மெய்காப்பளாராக இருந்த மருதுசகோதர்களுக்கு தளபதி பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்தல்



சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர்
 தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர்.
வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, அனைத்து போர் பயிற்சியும் கற்று கைதேர்ந்தவர் பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒருநாள் வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்வதை அறியாமல் இருந்த மன்னர் , இதை பார்த்த சின்ன மருது பாய்ந்து வேங்கையின் வாலை பிடித்து அடித்தது தூக்கி எரிய பெரியமருது அந்த வேங்கையை கொல்லுகிறார்
இதுவரைக்கும் தான் வரலாறு கேள்விபட்டிருப்பீர்கள்
அதற்கு பிறகு நடந்த சம்பவம்
அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன வீரபேரரசர் முத்துவடுகநாததேவர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் பரிசாக அளித்து பெருமை செய்தார்.
முத்துவடுகநாததேவருக்கு மெய்காப்பளாராக இருந்த மருதுசகோதர்களுக்கு தளபதி பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்தல்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். இவர்களுக்கு ஒய்வு அளித்துவிட்டு
பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் சுவப்பிரமணியத்தேவரிடம் பயிற்ச்சி பெற்று பிறகு
சின்ன மருதுவை தளபதியாகவும் , பெரியமருதுவை அமைச்சராகவும் மன்னர் முத்து வடுகநாதர் நியமித்தார்.

Thursday 30 June 2016

ராணி வேலுநாச்சியாரை ஆங்கிலேயரிடம் காத்த உடையாள்


காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் கொல்லங்குடி வெட்டுடைய காளி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
அங்கு காளியாக வீற்றிருப்பவர் ராணி வேலு நாச்சியாரை ஆங்கிலப் படையிடமிருந்து காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த உடையாள் என்ற வீரப்பெண்மணிதான் தன்னைக் காக்க தன்னுயிரைக் கொடுத்த உடையாளின் பெயரில் பெண்கள் படையை அமைத்திருந்தார் வேலு நாச்சியார். ராணியைக் காப்பதற்காக இரு துண்டுகளாக வெட்டுப்பட்ட உடையாளை வெட்டு உடைய காளியாக அந்தப் பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தனர்.
கோவில் இருக்கும் கொல்லங்குடி ஆயுதங்கள் செய்யும் இடமாக, கொல்லர்கள் குடியிருந்த இடமாக இருந்ததால் கொல்லர்குடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் கொல்லங்குடி ஆகியிருக்கிறது.
வேலுநாச்சியாரை காப்பாற்றிய மறவர்படை
மறவர்படை தங்க வைக்கப்பட்டிருந்த இடம்தான் காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் மறவர் மங்களம் (இப்போது மறவமங்களம்) என்ற ஊர். வெள்ளையருக்கு எதிரான போரில் இந்த ஊரில் இருந்த வீரர்கள் நிறையப் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் நினைவாக இந்த ஊரில் ஒரு ஊரணி வெட்டப்பட்டிருக்கிறது. அந்த ஊரணிக்குப் பெயர் 'குழு மாண்ட ஊரணி' என்பதாகும். இன்றும் அந்த ஊரணி வரலாற்றின் சாட்சியாக மறவமங்களத்தில் இருக்கிறது.

மருதுசகோதர்கள் தானமாக கொடுத்த கண்மாய்

கொல்லங்குடிக்கு அருகில் இருக்கும் ஊர் குறுக்கத்தி, காளையார் கோவிலுக்கு மருது சகோதரர்கள் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தியபோது தேர் ஓடவில்லையாம். எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை என்றபோது என்ன பிரச்சினை இதை எப்படி சரி செய்வது என்று மருது சகோதரர்கள் ஆலோசனை செய்த நேரத்தில் கொல்லங்குடி காட்டுக்குள்ளே இருக்கும் குறுக்கத்தி கண்மாயில் வீரமுத்து ஆனந்தசாமி என்ற சித்தர் இருக்கிறார் என்றும் அவர் வந்தால் சரி செய்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவரை அழைத்து வந்த மருதுசகோதர்கள்
அந்தச் சித்தரும் தேர்ச் சக்கரத்தில் இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து நீக்கி, அங்கு ஒரு கவியும் பாடியிருக்கிறார். அதன் பின்னரே தேர் ஓடியிருக்கிறது.
ஓடாமல் நின்ற தேர் ஓடிய மகிழ்ச்சியில் பெரியமருது என்ன வேண்டும் கேள் என்று சித்தரிடம் கேட்டதற்கு இப்போது நாங்கள் இருக்கும் குறுக்கத்தி கண்மாய்ப் பகுதியை எனக்கு எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுக்க, குறுக்கத்தி கிராமம் உருவாகியிருக்கிறது. அதன் பின்னர் சில காலம் வாழ்ந்த அந்த சித்தர் தம் மக்களிடம் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதனால் இன்று வரை அந்தக் கிராமத்தில் எந்தக் கோவிலும் இல்லை
அது என்ன குறுக்கத்தி என்றால் குறுக்கத்தி என்பது ஒருவகைப் பூவாம்... சங்க காலத்தில் இருந்திருக்கிறது... இந்தப் பூ குறித்து புறநானூற்றில் பாடல் இருப்பதாகவும் கூறபடுகிறது

Saturday 25 June 2016

மாமன்னர் புலி தேவர் வரலாறு:

மாமன்னர் புலி தேவர் வரலாறு:

இயற்பெயர்: ,'காத்தப்பப் பூலித்தேவர்' 'பூலித்தேவர்'என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.

பெற்றோர்கள்:சித்திரபுத்திரத் தேவர் - சிவஞான நாச்சியார் 
பிறப்பு:  1-9-1715
இறப்பு:  "பூலிசிவஞானம்"

இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டவர் மாமன்னர் புலி தேவர், வாள் வீச்சில் வல்லவர்,  மிக பெரிய யானை படையும், குதிரை படையும் கொண்டிருந்தர்.

மறவர் இனத்தை சார்ந்தவரான புலி தேவர் நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு(1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்

விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்பு:

1755ஆம் ஆண்டு கர்னல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்யைனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல்கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.

1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல்கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1767 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார

பிறப்பு:

மதுரையின் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்றுநெற்கட்டான் செவ்வல் பாளையம் ஆகும்.

பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர்,'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்'என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.

சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய குல தெய்வமான (பூலுடையார் கோயில்)உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது.

வாழ்கை:

அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர்.

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டத

அன்னியர் எதிர்ப்பு:

பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.

ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.
இத்கு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான்.
 அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.
பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.

மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்டபி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.
ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.
இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.
1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது. 1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.
ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

மறைவு:

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.
மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

மன்னர் முத்துவடுகநாததேவர் வரலாறு

ஆட்சி : 1749 - 1772
முடிசூட்டு விழா : 1749
மனைவி : வேலு நாச்சியார்
அரச குலம் : சேது மன்னர்
தந்தை : சசிவர்ணத்தேவர்
முத்து வடுகநாத தேவர் என்பவர்
சிவகங்கை பாளையத்தை ஆண்ட மன்னர் ஆவார். 1749ல் இவரின் தந்தையான சசிவர்ணத்தேவர் இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
மதுரை மீட்பு
1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் போர் தொடுத்து கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாததேவர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பினி படைகளுக்கு சிவகங்கை மீது கோபம் இருந்தது.
வரி மறுப்பு
இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாததேவர் சிவகங்கை சார்பாக கும்பினியருக்கு திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான். அதை முத்துவடுகநாததேவர் மறுத்ததால் கான்சாகிப் மூலம் கொலை மிரட்டலும் விட்டுப் பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1763ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்து சிவகங்கை மீது போர் தொடுத்து சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்து கான்சாகிப்பையும் விரட்டினார்.
இராமநாதபுரம் இழப்பு
அதே நேரத்தில் பரங்கிப்படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. அப்போது இராமநாதபுரத்தின் பரங்கித் தளபதியாக மார்டினசு பொறுப்பேற்றான். அதற்கு உதவியவன் இராமநாதபுர தளபதிகளில் ஒருவனான இராயப்பன் என்றவனே. தனக்கு முத்துவடுகநாததேவர் மந்திரி பதவி அழிக்காததால் தான் அவன் இந்தத் துரோகச் செயலில் இறங்கியதாகத் தெரிகிறது. அதன்பிறகு இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தருமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்கு தருமாறும் செய்தியனுப்பினான். அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமையை சேர்ந்தவர்களின் உதவியை நாடினார் முத்துவடுகநாததேவர்
இராமநாதபுரம் மீட்பு
மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து பரங்கியர்களின் துப்பாக்கிப் படைமீதும் பீரங்கிப்படை மீதும் போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் முத்துவடுகநாததேவரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை என சமாதானம் பேசினர். அதை உண்மையென முத்துவடுகநாததேவர் நம்பினார்.
ஆங்கிலேயர்கள் சதியில் மரணம்
சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த காளையார் கோவிலுக்குச் சென்றுவிட்டார் முத்துவடுகநாததேவர் இதையறிந்த பரங்கிப்படை தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒன்றை காளையார் கோவிலுக்கு முத்துவடுகநாததேவரை கொல்ல பான்சோர் என்ற பரங்கித்தளபதியின் கீழும் மற்றொரு பிரிவை மருது சகோதரர் படை மீதும் செலுத்திப் போர் தொடுத்தது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாததேவர் பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். முத்துவடுகநாதரின் இளையராணி கெளரி நாச்சியாரும் கொல்லப்பட்டார்.
போலி வரலாறு
சமாதானம் பேசுவதாக பொய் கூறிவிட்டு கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற நேரம் பார்த்து முத்துவடுகநாதேவரை கொன்றுவிட்டு சிவகங்கையும் காளையர்கோவிலையும் வெற்றி கொண்டதாக பரங்கியர் தம்பட்டம் அடித்துக்கொண்டனர். அந்த சதிச்செயலுக்கு லண்டன் நகரவாசிகள் வெட்கத்துடன் வெளியிட்ட ஆங்கில நாளிதழ் செய்திகளே சாட்சி.
சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்
முத்துவடுகநாதர் இறந்ததை அறிந்த அவரின் மனைவியான வேலு நாச்சியார் தன் மகளான வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து விருப்பாச்சிக்குத் தப்பிச்சென்றார். அதன்பிறகு கைதர் அலி உதவிபெற்று மீண்டும் சிவகங்கை, இராமநாதபுரம், காளையார்கோவில் போன்ற இடங்களை கைப்பற்றி 4 ஆண்டுகள் அரசாண்டார். சசிவர்ணத்தேவர் முதல் வெள்ளையர் ஆட்சிவரை இராமநாதபுரத்தை ஆண்டவர்களின் பட்டியல் பின்வருமாறு,
1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1790 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1790 - 1793 - வெள்ளச்சி நாச்சியார் வேலு நாச்சியார் மகள்
5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையனத் தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் கனவர்
5. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
9. 1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
9. 1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
12. 1878 - 1883 - துரைசிங்கராஜா
13. 1883 - 1898 - து. உடையணராஜா
1892ம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார்.
1910ம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது.