Pages

Thursday 30 June 2016

ராணி வேலுநாச்சியாரை ஆங்கிலேயரிடம் காத்த உடையாள்


காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் கொல்லங்குடி வெட்டுடைய காளி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
அங்கு காளியாக வீற்றிருப்பவர் ராணி வேலு நாச்சியாரை ஆங்கிலப் படையிடமிருந்து காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த உடையாள் என்ற வீரப்பெண்மணிதான் தன்னைக் காக்க தன்னுயிரைக் கொடுத்த உடையாளின் பெயரில் பெண்கள் படையை அமைத்திருந்தார் வேலு நாச்சியார். ராணியைக் காப்பதற்காக இரு துண்டுகளாக வெட்டுப்பட்ட உடையாளை வெட்டு உடைய காளியாக அந்தப் பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தனர்.
கோவில் இருக்கும் கொல்லங்குடி ஆயுதங்கள் செய்யும் இடமாக, கொல்லர்கள் குடியிருந்த இடமாக இருந்ததால் கொல்லர்குடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் கொல்லங்குடி ஆகியிருக்கிறது.
வேலுநாச்சியாரை காப்பாற்றிய மறவர்படை
மறவர்படை தங்க வைக்கப்பட்டிருந்த இடம்தான் காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் மறவர் மங்களம் (இப்போது மறவமங்களம்) என்ற ஊர். வெள்ளையருக்கு எதிரான போரில் இந்த ஊரில் இருந்த வீரர்கள் நிறையப் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் நினைவாக இந்த ஊரில் ஒரு ஊரணி வெட்டப்பட்டிருக்கிறது. அந்த ஊரணிக்குப் பெயர் 'குழு மாண்ட ஊரணி' என்பதாகும். இன்றும் அந்த ஊரணி வரலாற்றின் சாட்சியாக மறவமங்களத்தில் இருக்கிறது.

மருதுசகோதர்கள் தானமாக கொடுத்த கண்மாய்

கொல்லங்குடிக்கு அருகில் இருக்கும் ஊர் குறுக்கத்தி, காளையார் கோவிலுக்கு மருது சகோதரர்கள் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தியபோது தேர் ஓடவில்லையாம். எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை என்றபோது என்ன பிரச்சினை இதை எப்படி சரி செய்வது என்று மருது சகோதரர்கள் ஆலோசனை செய்த நேரத்தில் கொல்லங்குடி காட்டுக்குள்ளே இருக்கும் குறுக்கத்தி கண்மாயில் வீரமுத்து ஆனந்தசாமி என்ற சித்தர் இருக்கிறார் என்றும் அவர் வந்தால் சரி செய்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவரை அழைத்து வந்த மருதுசகோதர்கள்
அந்தச் சித்தரும் தேர்ச் சக்கரத்தில் இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து நீக்கி, அங்கு ஒரு கவியும் பாடியிருக்கிறார். அதன் பின்னரே தேர் ஓடியிருக்கிறது.
ஓடாமல் நின்ற தேர் ஓடிய மகிழ்ச்சியில் பெரியமருது என்ன வேண்டும் கேள் என்று சித்தரிடம் கேட்டதற்கு இப்போது நாங்கள் இருக்கும் குறுக்கத்தி கண்மாய்ப் பகுதியை எனக்கு எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுக்க, குறுக்கத்தி கிராமம் உருவாகியிருக்கிறது. அதன் பின்னர் சில காலம் வாழ்ந்த அந்த சித்தர் தம் மக்களிடம் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதனால் இன்று வரை அந்தக் கிராமத்தில் எந்தக் கோவிலும் இல்லை
அது என்ன குறுக்கத்தி என்றால் குறுக்கத்தி என்பது ஒருவகைப் பூவாம்... சங்க காலத்தில் இருந்திருக்கிறது... இந்தப் பூ குறித்து புறநானூற்றில் பாடல் இருப்பதாகவும் கூறபடுகிறது

No comments:

Post a Comment